Load Image
dinamalar telegram
Advertisement

சில வரி செய்திகள்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர், சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் அமர போதுமான டெஸ்க், பெஞ்ச் இல்லை. இதையறிந்த, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துல, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். அத்தொகையின் வாயிலாக வாங்கப்பட்ட டெஸ்க், பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை எம்.எல்.ஏ., விஜயகுமார் வழங்கி, சிறப்புரையாற்றினார். கவுன்சிலர் தங்கராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் தெற்கு, கோபாலன் நகர் கிளை மா.கம்யூ., சார்பில், மேயரிடம் அளித்த மனுவில், 'கோபாலன் நகர் உள்ளிட்ட 55 வது வார்டு பகுதிகளில் குடிநீர், 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே சப்ளையாகிறது. வாரம் ஒரு முறை என மாற்ற வேண்டும். திரு.வி.க., நகர், பாரதியார் நகர் போன்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய் துார் வாராமல் கழிவு தேங்கிக் கிடக்கிறது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டிய குழிகள் முறையாக மூடாமல் ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. தெரு விளக்குகள் பல வீதிகளில் முறையாக எரிவதில்லை. அனைத்து பகுதியிலும் தார் ரோடு அமைக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.

அரசு 'கேபிள் டிவி' நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை வழங்கிய தனியார் நிறுவனம் திடீரென சேவையை நிறுத்தியது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் ஒளிபரப்பு ரத்தானது. திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ள 73 ஆயிரம் பேரில், ஒரு சிலர், கடந்த 19ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக சேனல்களை பார்க்க முடியாமல் தவித்தனர். மக்களுக்கு பதில் சொல்லமுடியாமல் ஆபரேட்டர்களும் திணறினர். பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, கேபிள் ஒளிபரப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

மக்கள் உரிமை கழக, திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். துணை தலைவர் ஜீவன்குமார், செயலாளர் முத்து கருப்பணசாமி முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் முருகன் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு, அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து பேசினார். நிர்வாகிகள் அமைப்பின் வளர்ச்சி குறித்து பேசினர். நிகழ்ச்சியில், தொழிற்சங்க பிரிவு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடந்த ஏலத்தில், மூலனுார், திருப்பத்துார், லாலாபேட்டை என, பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், 157 பேர், 77 ஆயிரம் கிலோ எடை கொண்ட, 1,513 தேங்காய்கள் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில், முதல் தரம் கிலோ 90.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 64.65 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தற்போது, 15 கிலோ எடை கொண்ட தேங்காய் எண்ணெய் 1,870 ரூபாய்க்கும் விற்பனையானது.

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. பாட்டு, நடனம், நாடகம் நடித்தல் என மாணவர்கள் தங்கள்திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி சுவர்களில் பாரதியார் மற்றும் வேலுநாச்சியார் படங்களை வரைந்தனர். ஊராட்சி தலைவர் சாவித்திரி, முன்னாள் தலைவர் முத்து மாணிக்கம், பி.டி.ஏ., தலைவர் ஆறுச்சாமி, மேலாண்மை குழு தலைவர் சுதா உட்பட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் ரெங்கசுவாமி நன்றி கூறினார். மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

உலக மரபு வார விழாவினை முன்னிட்டு, திருப்பூர் செல்லம்மாள் காலனி துவக்கப்பள்ளியில், தொல்லியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் கணேஷ்குமார் வரவேற்றார். கவுன்சிலர் நாகராஜ், மேலாண்மை குழுத்தலைவர் நாகஅபிராமி, பி.டி.ஏ., தலைவர் பொன் பழனிசாமி முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., அமுதா கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர் முஸ்ராக் பேகம், கோவை, தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் நந்தகுமார், வீரராஜேந்திரன் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வு மைய இயக்குனர்கள் ரவிக்குமார், பொன்னுசாமி ஆகியோர் பேசினர். ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement