ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையானவர் திருப்பத்துாரைச் சேர்ந்த களிக்கண்ணன், 52, என்பதும், திருப்பத்துார் பா.ஜ., நகர செயலராக இருப்பதும் தெரிந்தது.
அவருக்கு திருமணமாகி, ஐந்து குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார்.
முன்விரோதம்
கொல்லப்பட்ட களிக்கண்ணன், ரியல் எஸ்டேட், இரும்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துள்ளார். அவருக்கும், ஹரி விக்னேஷ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன், ஹரி கிருஷ்ணன் தாக்கியதில் களிக்கண்ணன் காயம் அடைந்துள்ளார். திருப்பத்துார் போலீசில் இது குறித்த வழக்கு பதிவாகி இருந்தது.
இந்நிலையில், திருப்பத்துார், பஜார் தெருவில் வாட்டர் கேன் குடோன் ஒன்றில் நேற்று முன்தினம் இரவில் களிக்கண்ணன்தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த குடோனுக்கு, வெள்ளை நிற, 'டாடா சபாரி' காரில் கும்பல் வந்துள்ளது. அவர்கள் களிக்கண்ணனை தாக்கி, காரில் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என, போலீசார் கருதினர்.
தனிப்படை போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆராய்ந்ததில், ஹரி விக்னேஷ், அவர் கூட்டாளிகள் கோகுல், சிவக்குமார், துரை, அருண் ஆகியோர் இக்கொலையை செய்திருக்கலாம் என, தெரிந்தது.
ஆர்ப்பாட்டம்
களிக்கண்ணன், 15 நாட்களுக்கு முன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டுமென, திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசாரின் மெத்தனத்தை கண்டித்து, பா.ஜ., மாநில செயலர் வெங்கடேசன் தலைமையில், பா.ஜ.,வினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே சென்ற டாடா சபாரி காரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அதிலிருந்த ஹரி விக்னேஷ், 24, கூலிப்படையைச் சேர்ந்த ஆந்திர மாநிலம், குப்பம் சாந்திபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 18, ஆனந்த், 22, மணிகண்டன், 22, கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த அருண், 23, திருப்பத்துார் அருண்குமார், 25, ஆகிய, ஆறு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் அனுதாபங்களை பகிர்ந்து கொள்ள வந்திருந்த கட்சி நிர்வாகிகளில் மிகவும் முக்கியமான பட்டியல அணியின் மாநில தலைவர் தடா பெரியசாமி அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளார் செய்தியாளர். ஆசிரியர் இதனை கவனிக்க வேண்டும்.