ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விளக்கம் கேட்டு கவர்னர் கடிதம்
சென்னை:'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.
இணையதள சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவை பார்வைக்காக வைக்கப்பட்டது.
அதன்பின் பள்ளி மாணவர்கள் மீது ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; பொது மக்களிடம் இ - மெயில் வழியாக பெறப்பட்ட கருத்துகள் பெறப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது.
இது ஆக. 29ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்து அதன்படி அவசர சட்டம் தயார் செய்யப்பட்டது.
கடந்த செப். 26ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு அக். 1ல் கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
அதையடுத்து அவசர சட்டத்திற்கு மாற்றாக கடந்த 19ம் தேதி சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதலுக்காக அக். 28ல் அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை.
இது தொடர்பாக கவர்னரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் சந்தேகங்களுக்கு விளக்கம் தயார் செய்யும் பணியை சட்டத் துறை மேற்கொண்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!