Load Image
dinamalar telegram
Advertisement

சித்தராமையா சூடுபட்ட பூனை பா.ஜ.,வின் எத்னால் கிண்டல்

Tamil News
ADVERTISEMENT


தார்வாட்,-''சித்தராமையா, காங்கிரசில் சுயமாக அறிவித்துக் கொண்ட முதல்வர். 'சூடு பட்ட பூனை' போன்று நடந்து கொள்கிறார்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் சாடினார்.

தார்வாடில் நேற்று அவர் கூறியதாவது:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் நிலை, சூடு பட்ட பூனை போன்று உள்ளது.

தன் பிறந்த நாளை முன்னிட்டு, தாவணகரேவில் மாநாடு நடத்தினார். இம்மாநாட்டில், 10 லட்சம் மக்கள் சேர்ந்ததாக, அவரது சீடர் ஜமீர் அகமது கான் கூறியிருந்தார்.

கர்நாடகாவில், 160 பொது தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியும் சித்தராமையாவுக்கு கிடைக்கவில்லையா.

சித்தராமையாவும், சிவகுமாரும் தேர்தலில் போட்டியிட்டால், தோல்வியடைவர் என, அவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ., சந்தோஷ் லாடுக்கு தோன்றியிருக்கலாம்.

எனவே சித்தராமையாவும், சிவகுமாரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, அவர் கூறியுள்ளார். அது, அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

பரேஷ் மேஸ்தா வழக்கில், மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தை அரசு தீவிரமாக கருதுகிறது. மறு பரிசீலனை செய்யும்படி, சி.பி.ஐ.,யிடம் கேட்டுள்ளோம்.

ரமேஷ் ஜார்கிஹோளிக்கு, மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்.

அவர் ம.ஜ.த.,வுக்கு செல்கிறார் என்பது பொய். அவருக்கு பா.ஜ.,வில் நல்ல எதிர்காலம் உள்ளது. நான் அமைச்சர் பதவி எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement