Load Image
dinamalar telegram
Advertisement

31 பசுக்கள் தத்தெடுப்பு

Tamil News
ADVERTISEMENT


பெங்களூரு-''கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கோசாலைகளில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு பசுவை தத்தெடுப்பேன்,'' என திரைப்பட நடிகர் சுதீப் தெரிவித்தார்.

கர்நாடக கால்நடை துறை சார்பில், பசுக்களை தத்தெடுக்கும் 'புண்ணிய கோடி திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் துாதராக திரைப்பட நடிகர் சுதீப் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பெங்களூரு சிக்கபானவாராவில் உள்ள தன் வீட்டில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுஹானுடன் இணைந்து சுதீப் நேற்று 'கோ பூஜை' செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

பசுக்களை பாதுகாப்பதில் மாநில அரசு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'புண்ணிய கோடி' திட்டத்தின் துாதராக நியமித்ததன் மூலம், எனது பொறுப்பை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள், திரையுலக கலைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் பசுக்களை தத்தெடுக்க வேண்டும். முதல்வர் பசவராஜ் பொம்மை, தன் பிறந்த நாளில், 11 பசுக்களை தத்தெடுத்தார்.

நானும் மாவட்டத்திற்கு ஒன்று என, 31 பசுக்களை தத்தெடுக்கிறேன். மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, 100 அரசு கோசாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே முதன் முறையாக 'புண்ணிய கோடி' தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்திய மாநிலம் கர்நாடகா. விலங்குகள் நல வாரியம், கால்நடை உதவி மையம், பசு சஞ்சீவினி ஆம்புலன்ஸ், கோமாதா கூட்டுறவு சங்கம், சுயசார்பு கோசாலை உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, புண்ணிய கோடி திட்டத்தின் துாதராக நியமனம் செய்ததற்கான சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement