Load Image
dinamalar telegram
Advertisement

3,673 துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக்கி அரசாணை



பெங்களூரு-பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும், 3,673 துப்புரவு பணியாளர்களை அரசு ஊழியர்களாக நிரந்தரம் செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம், 54 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.

இதில், 17 ஆயிரம் பணியாளர்களை படிப்படியாக நிரந்தரம் செய்ய, கர்நாடக அரசு சில மாதங்களுக்கு முன் தீர்மானித்தது.

இதன்படி, முதல் கட்டமாக பெங்களூரு மாநகராட்சியில் 3,673 துப்புரவு பணியாளர்களை அரசு ஊழியர்களாக நிரந்தரம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்யப்படுவோருக்கு, 17,000 - 28,950 ரூபாய் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும். அதிகபட்ச வயதாக 55 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி, ஊதியம் பெற்றதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இல்லை என்றால், எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை நியமிக்கலாம்' என விலக்கு வழங்கப்பட்டுஉள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement