Load Image
dinamalar telegram
Advertisement

கோவை அதிவிரைவு ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைப்பு

கோவை:கோவை- லோக்மான்ய திலக் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த பெட்டிகள், எளிதில் தீப்பிடிக்காத வகையிலும், பாதுகாப்பான பயணம் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சொகுசு இருக்கைகள், 'சார்ஜிங்' வசதி, வேகமாக இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இந்நிலையில், கோவை- லோக்மான்ய திலக் (மும்பை) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 11013) இன்று முதலும், லோக்மான்ய திலக்- கோவை (வண்டி எண்: 11014) ரயிலில் வரும், 27ம் தேதி முதலும், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement