Load Image
dinamalar telegram
Advertisement

கோளாறு நிறைந்த கோலார் தொகுதி சித்தராமையாவுக்கு கை கொடுக்குமா?



கோலார்,--கோலார் சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை உசுப்பேத்தி காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்க சில முக்கிய தலைவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வேளையில், தங்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று அம்மாவட்டத்தின் சில முக்கிய தலைவர்கள், அவருக்கு எதிராக கட்சி மேலிடத்தில் 'சீட்' கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது,

சித்தராமையா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டத்தில் பொது தொகுதியான கோலார் சட்டசபை தொகுதி, தற்போது ம.ஜ.த.,வசம் உள்ளது. இருந்த போதும் எம்.எல்.ஏ., வாக உள்ள சீனிவாச கவுடா, ம.ஜ.த.,வை விட்டு விலகியதாகவே கருதப்படுகிறார்.

எனவே ம.ஜ.த., ஸ்ரீநாத் என்பவரை, போட்டியிட வைக்க திட்டமிட்டு வருகிறது. எனவே சீனிவாச கவுடா, காங்கிரசில், தன் மகனுக்கு சீட் எதிர்பார்த்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த வேளையில், சித்தராமையா கோலாரில் போட்டியிட வேண்டுமென்ற மாவட்டத்தின் முக்கிய தலைவர்களின்வற்புறுத்தலை ஏற்று, வந்து சென்றார்.

இதே கோலார் தொகுதிக்கு, முன்னாள் எம்.பி., முனியப்பா, கர்நாடக சட்ட மேலவை தலைவர் சுதர்சன், டி.சி.சி.,வங்கி என்ற கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பைலஹள்ளி கோவிந்த கவுடா,மனோகர், சீனிவாஸ், கொத்துார் மஞ்சுநாத் ஆகியோரும் சீட் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால், கோலாரில் சித்தராமையாவுக்கு ஒருமித்த ஆதரவு இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இத்தொகுதியில் சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் 'சீட்' வழங்கினாலும், கோலாரின் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் ஒருமித்த கருத்துடன் அவரை ஆதரிப்பரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'காங்கிரசின் முனியப்பா, சுதர்சன், பைலஹள்ளி கோவிந்த கவுடா, கொத்துார் மஞ்சுநாத் ஆகியோர் ஒருங்கிணைந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டால், பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வை எதிர்கொள்ள முடியும். இதனால், சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி, அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை.

'எனவே, அலசி ஆராய்ந்து கோலார் பக்கம் சாய்வது பயன் தருமா என்பதை ஒன்றுக்கு நுாறு முறை யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்' என, கோலார் தொகுதியின் நிலவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையாவின் அரசியல் அத்தியாயத்துக்கு கோலாரும் கோளாறாக உள்ளதாக தெரிகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement