Load Image
dinamalar telegram
Advertisement

பெங்., மாநகராட்சி தேர்தல் நடப்பது சந்தேகம் வாரி வழங்கிய வள்ளல்கள் கடும் அதிருப்தி

Tamil News
ADVERTISEMENT


பெங்களூரு,-பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்குரிய சமூக வாரியான இட ஒதுக்கீடு வெளியிடுவதற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு பின். புதிய ஆட்சி அமைந்த பின்னரே தேர்தல் நடக்கும் என கருதப்படுகிறது. இதனால் கவுன்சிலர் பதவியை எதிர்பார்த்து 'வாரி வழங்கிய' வள்ளல்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம், 2020 செப்டம்பரில் நிறைவு பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இதுவரை தேர்தல் நடக்கவில்லை.

இதற்கிடையில், வார்டுகளின் எண்ணிக்கை 198 லிருந்து, 243 ஆக உயர்த்தப்பட்டது. தேர்தல் நடத்த உத்தரவிடும்படி காங்கிரசை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் சிவராஜ், அப்துல் வாஜித் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் அடிப்படையில், வார்டு மறுவரையறை பணிகள் முடித்து, சமூக வாரியாக இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், சரியாக வரையறை செய்யவில்லை என சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் இப்பணிகளை முடிக்க உத்தரவிட்டது.

இதன்படி, நவம்பர் இறுதிக்குள் புதிய இட ஒதுக்கீடு அறிவிக்கும்படி கர்நாடக அரசுக்கும்;

அதன்பின் டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கும்படி மாநில தேர்தல் கமிஷனுக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் செப்டம்பர் 30ல் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் காலக்கெடு முடிவதற்கு, ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சமூக வாரியாக இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிட மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்க கோரி, மாநில அரசு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, மூன்று மாதங்கள் என்றதால், பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும். அதன்பின், பட்டியல் வெளியிட்டு, ஆட்சேபனைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

இறுதி பட்டியலுக்கு பின்னரே தேர்தல் கமிஷன் கால அட்டவணை அறிவிக்க வேண்டும்.

இதற்கிடையில், சட்டசபை தேர்தல் பணிகள் துவங்கி விடும். இதையே சாக்காக வைத்து மாநகராட்சி தேர்தலை தாமதப்படுத்துவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கால அவகாசம் கோரி அரசு தாக்கல் செய்துள்ள மனு, எப்போது விசாரணைக்கு வரும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த போக்கை பார்க்கும் போது, சட்டசபை தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கழித்த பின்னரே, பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாநகராட்சி கவுன்சிலர் பதவியை எதிர்பார்த்து, 'வாரி வழங்கிய' வள்ளல்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement