ADVERTISEMENT
விருதுநகர்:''தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர்களாக பணிபுரிவோரை பணிவரன்முறை செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் ரமேஷ் வலியுறுத்தினார்.
நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 870 பேர் கணினி உதவியாளர்களாக மாநிலத்தில் பணிபுரிகின்றனர். 2017 அரசாணையின் படி இத்திட்டத்தின் உதவியாளர் பணியிடத்தை இறக்கம் செய்து, இளநிலை உதவியாளராக மாற்றி கணினி உதவியாளர்களாக பணிபுரிவோரை அப்பணியில் ஈர்த்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் உதவியாளராக பணிபுரிந்த பலரும் ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலக பணிகளுக்கு மாற்றப்பட்டனர். கணினி உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்களாக பணி வரன்முறை செய்யப்படவே இல்லை. இதனால் இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்காததால் அடுத்தடுத்த பதவி உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.
கணினி உதவியாளர்களாக பணிபுரிவோர் 50 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கல்வித்தகுதி அடிப்படையில் கணினி உதவியாளர் பணிக்கு கலெக்டரால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு பணிபாதுகாப்பு இல்லை.
இதுகுறித்து சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
கணினி உதவியாளர்களை பணிவரன்முறை செய்ய கோரி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிச. 16 முதல் தமிழகம் முழுவதும் இக்கோரிக்கை, பணிசுமை, ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம், என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!