Load Image
dinamalar telegram
Advertisement

சீக்ரெட் சிங்காரம்மூடநம்பிக்கையை உடைத்த சி.எம்.,

எல்லை மாவட்டத்துக்கு எந்த சி.எம்., போனாலும் அவங்களோட பதவி பறிபோகுமுன்னு மூட நம்பிக்கை இருக்கு. அதனால பல சி.எம்.,க்கள் தன் ஆட்சிக்காலத்தில், அங்க போகாம தவிர்த்து இருக்காங்க. இப்போ இருக்கற சி.எம்., போன வருஷம் போயி இருந்தாரு. அதுக்கு அப்புறம் அவரோட பதவி பறிபோகுமோ, அப்படீங்கற நிலைமை இருந்தது. ஆனாலும் இப்ப வரை பதவியை தக்க வச்சிட்டுதான் இருக்காரு.

இப்போ மறுபடியும் எல்லை மாவட்டத்துக்கு போக இருக்காரு. இதன் மூலம் எல்லை மாவட்டதுக்கு போனா பதவி பறிபோகாதுங்கற மூட நம்பிக்கையை உடைக்க போறேன்று சொல்றாரு. அதுபோல ராணி சென்னம்மா பிறந்த மண்ணுக்கு போனாலும், பதவி பறிபோகும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அங்கயும் போயிட்டு வந்திருக்காரு.

'பதவி போகும்னு நம்பிக்கை இருக்கிற, இரண்டு இடத்துக்கு போயிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் என் பதவி போகல. இதன் மூலமா மூட நம்பிக்கையை உடைச்ச சி.எம்., நான் தான்'னு சொல்லிட்டு இருக்காராம்.

ஜோசியம் பார்க்கிறாங்க!

தொட்ட கவுடரின் ஒரு பேரன் ஜெயிச்சி லோக்சபாவுக்குள்ள போயிட்டாரு. இன்னொரு பேரன் தேர்தல்ல தோத்துட்டாரு. அதனால அவர இந்த தேர்தல்ல ஏதாவது ஒரு தொகுதியில நிக்க வச்சி ஜெயிக்க வைக்க தாத்தாவும், அப்பாவும் 'பிளான்' பண்ணிட்டு வராங்க.

இதுக்காக தோதான தொகுதியை தேடிட்டு இருக்காங்க. அவங்க கட்சியின் கோட்டை மாவட்டமாக இருந்தாலும் அவருக்கு வெற்றியை தருமான்னு தெரியல. ஏன்னா போன முறை மொத்த மாவட்டமும் அவங்க கட்சி எம்.எல்.ஏ.,ங்க இருக்கிற தொகுதியிலதான் நிக்க வச்சாங்க. ஆனா அதிர்ஷ்டம் கை கொடுக்கல. அதனால, இந்த முறை நின்னா ஜெயிக்க முடியுமா, இல்லையான்னு ஜோசியம் கேட்டுட்டு வாராங்களாம்.

இந்த கட்சி தலைவர்கள் எல்லாம் ஜோசியத்த அதிகமாக நம்புறவங்க. அதனால இந்த தேர்தல்ல ஜோசியம் எந்த அளவுக்கு கைகொடுக்க போகுதுன்னு பார்க்கலாமுன்னு தொண்டர்கள் சொல்றாங்க.

வலை வீசுறாங்களாம்!

கர்நாடகாவுல கதரு கட்சியில சமீபத்துல விருப்ப மனு வாங்கினாங்க. இது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே குவிஞ்சி இருக்காம். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று முதல் 10 பேர் வரை விருப்ப மனு குடுத்திருக்காங்க. இதனால கதர் தரப்பு சந்தோஷத்துல இருக்காம்.

இது தாமரைக்காரங்களை யோசிக்க வச்சிருக்காம். விருப்ப மனு போட்ட எல்லாருக்கும் சீட் கிடைக்காதுன்னு கதர்காரங்களுக்கும் தெரியும்; தாமரைக்கும் தெரியும். அதனால விருப்ப மனு போட்டவங்க யாருன்னு பார்த்து, அதுல நிச்சயம் சீட் கிடைக்காதுன்னு இருக்கற முக்கிய தலைவர்களை தாமரை கட்சிக்காரங்க தங்கள் பக்கம் இழுக்க முடிவு பண்ணி இருக்காங்களாம்.

ஆதனால பெயரளவுக்குதான் கதர் கட்சியின் விருப்ப மனு குறித்து சமூக வலைதளத்துல விமர்சனம் செய்யப்படுதுன்னு சொல்லப்படுது.

கிராமமே மாறிடுச்சாம்!

கர்நாடகா கவர்மென்ட்ல, இப்பத்தான் பட்டியலினத்துக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிச்சி இருந்தாங்க. இதனால அந்த சமுதாயத்துக்காரங்க மகிழ்ச்சியில இருக்காங்க. இட ஒதுக்கீடு விஷயத்தை அவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக மாநாடு எல்லாம் நடத்திட்டு வராங்க.

இதேபோல, மக்கள் தொகை அடிப்படையில பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, பிளவர் கட்சி முடிவு பண்ணி இருக்கு. இந்த அறிவிப்பு கிராம அளவிலும் பரவி வருது. இந்த அறிவிப்பினால் கவரப்பட்ட மலைநாடு பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தின் ஒட்டு மொத்த ஜனங்களும் எதிர்க்கட்சியில இருந்து பிளவர் கட்சிக்கு தாவி இருக்காங்க.

வழக்கமான இணைப்பு நிகழ்ச்சிக்கு கட்சி சார்புலதான் ஏற்பாடு பண்ணுவாங்களாம். ஆனா இங்க கிராமத்துக்காரங்களே சொந்த பணத்தை செலவிட்டு பந்தல் போட்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்காங்க. அப்பகுதி கட்சி தலைவர்களும் கிராமத்தினரின் அன்பை பார்த்து ஆச்சரியப்பட்டு போனாங்களாம். இது இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு கிடைத்த வெற்றின்னு பிளவர்காரங்க சொல்லிக்கிறாங்க.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement