Load Image
dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 முடித்த பெண்களுக்குவேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர்:பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமான முகாம் நாளை திருப்பூரில் நடக்கிறது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா ஆகியன இணைந்து பிளஸ் 2 முடித்த பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நாளை (26ம் தேதி), திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி வளாகத்தில் நடத்துகின்றன.

ஒசூரில் உள்ள தொழிற்சாலையில் இளநிலை தொழில் நிபுணர் பணியிடத்துக்கு, 18 வயது பூர்த்தியான பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி அளித்து வேலை வழங்கப்படும். பட்டதாரிகள் விண்ணப்பிக்க கூடாது.

காலை 8:00 முதல் 10:00 மணி வரை பெயர்கள் பதிவு செய்யலாம். 10 மற்றும் 12 ம் வகுப்பு மார்க் ஷீட், 12ம் வகுப்பு டி.சி., மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement