ஹோட்டலில் திருட்டு: வாலிபருக்கு ஓராண்டு
மங்களூரு-கங்கவாடி பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டலில், காணிக்கை டப்பாவை திருடியவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தட்சிண கன்னடா மங்களூரின், கங்கவாடி பைபாஸ் சாலையில் ஒரு ஹோட்டல் உள்ளது. ஹோட்டலின் கவுன்டர் அருகில், 'காணிக்கை டப்பா' வைக்கப்பட்டுள்ளது. இந்த டப்பா 2021, மார்ச் 15ல் திருடு போனது.
இது குறித்து, விசாரணை நடத்திய மங்களூரு கிழக்கு போலீசார், முகமது ஆசிப் குக்காஜி, 28, முகமது இலியாஸ், 30, ஆகியோரை கைது செய்தனர். காணிக்கை டப்பாவையும், 705 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணை முடித்து, மங்களூரின், இரண்டாவது சி.ஜெ.எம்., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
முகமது ஆசிப் குக்காஜிக்கு, ஓராண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதம் செலுத்த தவறினால், 10 நாட்கள் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.
இவ்வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, முகமது இலியாசின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!