Load Image
dinamalar telegram
Advertisement

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அநீதி

Tamil News
ADVERTISEMENT
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் அதிகாரியின் அலட்சியத்தால் பக்தர்களுக்கு பாதுகாப்பின்றி அசாதாரண சம்பவங்கள் நடப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு வி.எச்.பி., புகார் அனுப்பியது.

இக்கோயிலில் சீர்திருத்தம் என்ற பெயரில் சில மாதங்களாக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோயில் சிலைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளது.

ஆக., 4ல் கோயில் ஊழியருடன் ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து கோயில் உண்டியலை திறந்து எண்ணினர். ஒப்பந்த ஊழியர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடி வீட்டுக்கு எடுத்து சென்றதாக போலீசார் கைது செய்தனர்.

நவ., 19ல் கோயில் காவலர்கள் பக்தர் ஒருவரை தரக்குறைவாக பேசி சரமாரியாக தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். நவ.,20 ல் கோயில் மைய மண்டபத்தை ஆன்மிக மரபை மீறி தடுப்பு வேலியில் மூடினர்.

நவ., 23ல் சீர்பாதம் தொழிலாளர்கள் இன்றி தங்கத்தேரை இழுத்ததில் தெலுங்கானா பெண் பக்தர் காயமடைந்தார். இதுபோல் பக்கதர்கள் பாதிக்கப்பட கோயில் அதிகாரியின் அலட்சியமே காரணம் என ஹிந்து அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியதாவது: இறைபக்தி மற்றும் பக்தர்கள் மீது அக்கறை இன்றி ஆன்மிக மரபுகளை மீறி கோயில் துணை கமிஷனர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளார்.

இரவு நடை சாத்திய பின் கோயில் பிரகாரத்திற்குள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மராமத்து பணி நடக்கிறது. இதனால் பழமையான சிலைகள் திருடு போகும் அபாயம் உள்ளது. அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் கோயிலில் தொடர்ந்து அசாதாரண சம்பவங்கள் தொடர்கின்றன.

இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement