Load Image
dinamalar telegram
Advertisement

அக்கடா/துக்கடா 1

Tamil News
ADVERTISEMENT


செயல்படாத குடிநீர் மையம்

மாதாந்திர மின் கட்டணம்

பீதர்: மின் வினியோக நிறுவனத்தின் குளறுபடி புதிதல்ல. பீதர், சிடகுப்பாவின் உடபாளா கிராமத்தில், எல்லம்மா கோவில் அருகில், 2018ல் சுத்தமான குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. நமக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என கிராமத்தினர் எதிர்பார்த்தனர். இதுவரை 1 லிட்டர் குடிநீர் கூட கிடைக்கவில்லை.

இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. பாதுகாப்பு இல்லாததால், மையத்தின் உட்புறம் இருந்த இரண்டு மோட்டார்கள் திருடு போயின. உள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக மாயமாகின்றன. மையத்தை கிராம பஞ்சாயத்தின் பொறுப்பிலும் ஒப்படைக்கவில்லை.

இவ்விஷயத்தில், எம்.எல்.ஏ.,வும் அக்கறை காண்பிக்கவில்லை. செயல்படாத குடிநீர் மையத்துக்கு, மாதந்தோறும் மின் கட்டணம் வருகிறது. கிராம பஞ்சாயத்து தண்டமாக ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் செலுத்துகிறது.

* அலையும் மாடுகளால் பிரச்னை

கொப்பால்: கொப்பால் நகரில், சாலைகளில் அலைந்து திரியும் மாடுகளால், பொது மக்கள், வாகன பயணியர் படும்பாடு கொஞ்சம், நஞ்சமல்ல. மாநகராட்சி அலுவலகம் முன் பகுதி, மத்திய பஸ் நிலையம், லேபர் சதுக்கம், மார்க்கெட் பகுதி, ரயில் நிலையம், கவி சித்தேஸ்வரர் மடத்தின் முன் பகுதி உட்பட, பல்வேறு இடங்களில் மாடுகள் அலைகின்றன.

பாதசாரிகள், வாகன பயணியரை மோதி தள்ளி கீழே தள்ளிய சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளாக, மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையை, மாநகராட்சி நிறுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், பெண் ஒருவரை மாடு குத்தி கொன்றது. இச்சம்பவத்துக்கு பின், விழித்துக்கொண்ட ஊழியர்கள், சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை துவங்கியுள்ளனர். இனியாவது அசம்பாவிதம் குறையமா என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* பள்ளி சத்துணவில் புழு

வீசி எறிந்த மாணவர்கள்

கலபுரகி: ஏழை சிறார்களுக்கு, ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என, மாநில அரசு மதிய உணவு வழங்குகிறது. ஆனால் ஊழியர்களின் அலட்சியத்தால், பள்ளிகளில் அளிக்கப்படும் மதிய உணவே சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிகளில் வழங்கிய உணவை தின்று, மாணவர்கள் பாதிப்படைந்த சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.

கலபுரகி, சித்தாபுராவின், சன்னதி கிராமத்தின், நடுநிலை பள்ளியில், நேற்று மதியம் உணவு பரிமாறப்பட்டது. சாதத்தில் பெருமளவில் புழுக்கள் தென்பட்டதால், மாணவர்கள் உணவை வீசியெறிந்தனர். சில மாணவர்கள் புழுக்களை கவனிக்காமல், உணவை சாப்பிட்டனர். இவர்களுக்கு என்னாகுமோ என, பெற்றோர் அஞ்சுகின்றனர். சுகாதாரமற்ற உணவை வழங்கி, சிறார்களின் உயிரோடு விளையாடும் ஊழியர்களின் மீது, கிராமத்தினர் கோபமடைந்துள்ளனர்.

* வாட்டி வதைக்கும் குளிர்

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் குளிர் அதிகரிக்கிறது. உடலை உறைய வைக்கும் குளிரால், மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவே அஞ்சுகின்றனர். தினமும் அதிகாலை நடை பயிற்சி, சைக்கிள் சவாரி செய்வோர், பூங்காக்களில் விளையாடும் சிறார்களை, தற்போது காண முடியவில்லை. சிலர் மட்டுமே தலையில் 'மப்ளர்' சுற்றிக்கொண்டு, ஸ்வெட்டர் அணிந்து நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

ராய்ச்சூரின் விவசாய பல்கலைக்கழக வளாகம், ஆஷாபுரா, கிருஷ்ணகிரி மலை, போளமானதொட்டி, வாசவி நகர் பூங்கா, நிஜலிங்கப்பா காலனி பூங்கா உட்பட பல இடங்களில் நடை பயிற்சி செய்வோரை காண முடியவில்லை. பலரும் வீட்டு முன், தீ மூட்டி குளிர் காய்வதை காணலாம்.

* மணல் மாபியாக்கள் மீது

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஹாவேரி: ஹாவேரி, ராணி பென்னுாரின் கோடிஹாளா கிராமத்தின், துங்கபத்ரா ஆற்றங்கரையில் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இது குறித்து கிராமத்தினர், கனிம பவனுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை. ஆதாரங்களையும் அனுப்பினர்.

அதிகாரிகள் சோதனையிட்டால் இரண்டு நாட்கள் மணல் அள்ளுவதை நிறுத்துகின்றனர்; அதன்பின் மீண்டும் துவங்குகின்றனர். சட்டவிரோத மணல் கடத்தலால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

துங்கபத்ரா ஆற்றங்கரையில் டிராக்டர், ஜே.சி.பி., டிப்பர்கள் பயன்படுத்தி மணல் அள்ளுகின்றனர். இதை சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் கண்ணை மூடி அமர்ந்துள்ளனர். அவர்களுக்கும் மணல் கொள்ளையில் பங்குள்ளதா என, கிராமத்தினர் காட்டத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

* ௧௦௩ வயதிலும் உழைக்கும் 'இளைஞர்'

சித்ரதுர்கா: சித்ரதுர்கா பரமசாகராவில் வசிப்பவர் சித்தப்பஜ்ஜா, 103. இவருக்கு ஆறு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, 20 பேரப்பிள்ளைகள் உள்ளனர். ஐந்து கொள்ளு பேரப்பிள்ளைகளையும் பார்த்துள்ளார். சித்தஜ்ஜாவின் மனைவி இறந்துவிட்டார். 103 வயதானாலும், இளைஞர்களே வெட்கப்படும் அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் என எந்த நோய்களும் இவருக்கு இல்லை. காது சிறிது மந்தம், கை, கால்களில் வலி, காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்னைகளை தவிர, வேறு எந்த பிரச்னையும் இன்றி, ஆரோக்கியமாக இருக்கிறார். இவரது பற்கள் திடமாக உள்ளன. தினமும் காலை 6:00 மணிக்கு எழுந்து, தங்களின் மளிகை கடையில் வியாபாரம் செய்கிறார்.

கேழ்வரகு, சோள களி, ரொட்டி சாப்பிடுகிறார். இந்த வயதிலும் உழைத்து, மற்றவருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.

* வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

பெலகாவி: பெலகாவி நிப்பானி புறநகரில், வயல் பகுதியில் நேற்று காலை பச்சிளம் ஆண் குழந்தை, துணியில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இந்த வழியாக பணிக்கு சென்ற தொழிலாளர்கள், குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். ஒயர் கூடையில் துணியில் சுற்றப்பட்ட குழந்தை இருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடுங்குளிரில் விட்டு சென்றதால், குழந்தை மயக்க நிலையில் இருந்தது. சிகிச்சைக்கு பின், முன்னேற்றம் தென்படுவதாக டாக்டர்கள் கூறினர்.

* 6 கிலோ கஞ்சா பறிமுதல்

யாத்கிர்: யாத்கிர் மாவட்டத்தின் பல இடங்களில் விவசாய வயல்களில் கஞ்சா பயிரிடுவதாக தகவல் வந்தது. எனவே யாத்கிர் வடகேராவின் உள்ளேசுகுராவில் மூன்று இடங்களிலும்; சுரபுராவின், ஏவூர் கிராமத்தில் ஒரு இடத்திலும் கலால்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இருவரை, கைது செய்தனர். 3 கிலோ உலர் மற்றும் 3 கிலோ பச்சை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில், சோதனை நீடிக்கிறது.

* வெப்ப மாவட்டத்தில் பனி மூட்டம்

விஜயபுரா: வெப்ப மாவட்டம் என பிரசித்தி பெற்ற விஜயபுராவில், தற்போது குளிர்ச்சி தன்மை நிலவுகிறது. உடலை உறைய வைக்கும் குளிர்ச்சியால், மக்கள் நடுங்குகின்றனர். காலை 11:00 மணியை தாண்டினாலும், சூரியன் தென்படுவதில்லை.

பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு, சாலையே சரியாக தெரிவதில்லை. எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. மிகுந்த கவனத்துடன் செல்கின்றனர். மொத்த விஜயபுராவும், பனிக்குள் பதுங்கி அமர்ந்துள்ளதை போன்றுள்ளது. மக்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறது; அவ்வப்போது மழையும் பெய்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement