Load Image
dinamalar telegram
Advertisement

கலையரசன், கலையரசி பட்டம் பெற பள்ளிகளில் கலை திருவிழா

Tamil News
ADVERTISEMENT
கோவை:கலை திருவிழா போட்டிகள், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், கோலாகலமாக நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கலைத்திருவிழா என்ற பெயரில், தனித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறுதியில் மாநில அளவில் நடக்கும் இப்போட்டியில், வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும்.

ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கவின்கலை, இசை, நடனம், நாடகம் என, ஆறு வகையான போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒன்பது வகையான, தனித்திறன் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளி அளவிலான நடைபெற்று வரும் போட்டிகளை, டி.இ.ஓ., பி.இ.ஓ.,க்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர், ஆய்வு செய்தனர். இதில் முதல் பரிசு பெறுவோருக்கு, வரும் 29ம் தேதி முதல் டிச., 5ம் தேதிக்குள், வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளை, டிச., இரண்டாம் வாரத்திற்குள் நடத்தி, ரிசல்ட் எமிஸ் இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான போட்டிகள், ஜனவரியில் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கான, கலை திருவிழா, அந்தந்த அரசு பள்ளிகளில் துவங்கியது. கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, நடனம், பாடல், ஓவியம், ஒப்புவித்தல், பாவனை உள்ளிட்ட, 150 பிரிவுகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரையும், 9 முதல் பத்தாம் வகுப்பு வரையும், பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரையும் என, 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டிகள் வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவர்கள், டிச.,1 மற்றும் 2ம் தேதிகளில் நடக்கும், வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement