Load Image
dinamalar telegram
Advertisement

கலைத்திருவிழாவில் மாணவர்கள் அசத்தல்

Tamil News
ADVERTISEMENT
பொள்ளாச்சி:பள்ளி கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழா போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா நடந்தது. ஊராட்சி தலைவர் பத்மபிரியா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார்.

பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பிரிவு ஒன்றில், 6, 7 மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.

கவின்கலை அல்லது நுண்கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், தனி நடனம், குழு நடனம், நாடகம், இசைக்கருவி இசைத்தல், ஓவியம் வரைதல், களி மண்ணில் உருவங்கள் செய்தல், காய்கறிகளை செதுக்கி சிற்பங்கள் செய்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

முதல் மூன்று இடத்துக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதல் பரிசு பெறும் மாணவர்கள், வடக்கு ஒன்றிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement