Load Image
dinamalar telegram
Advertisement

பருவமழை பெய்யாததால் அணை நீர்மட்டம் சரிவு

Tamil News
ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

கடந்த மாதம், 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கியது. சாரல் மழையாக பெய்தது, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாததால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.

இதனிடையே, வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால், தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 158.98 அடியாக இருந்தது. இதேபோல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில், நேற்று காலை, 42.21 அடி நீர்மட்டம் இருந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement