Load Image
dinamalar telegram
Advertisement

திருப்பூர் பா.ஜ., அலுவலகத்தில் சூர்யா, டெய்சியிடம் விசாரணை

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:பா.ஜ., மாநில நிர்வாகிகளுக்கு இடையே நடந்த சர்ச்சைக்குரிய 'ஆடியோ' பதிவு விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகிகள் டெய்சி, சூர்யா சிவா ஆகியோர் திருப்பூரில் நடந்த விசாரணைக்கு ஆஜராகினர்.

பா.ஜ., - ஓ.பி.சி., பிரிவு மாநில பொதுச்செயலர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சிக்கு இடையே நடந்த சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக, இருவரிடமும் விசாரணை நடத்தி, ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

இதற்காக, மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில செயலர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று விசாரணை நடந்தது.

ஒழுங்கு நடவடிக்கை குழு முன், சூர்யா சிவா, டெய்சி ஆஜாராகி விளக்கம் அளித்தனர்.

விசாரணைக்கு பின், சூர்யா சிவா, டெய்சி கூறியதாவது:

ஆடியோ விவகாரத்தில் விசாரணை குழுவில் ஆஜராகி, தனித்தனியே விளக்கம் அளித்தோம். எங்களுக்கு இடையே பரஸ்பரம் பேசி முடித்துக் கொண்டோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு அவல் கிடைத்தது போல பரப்பி வருகின்றனர்.

இதை பத்திரிகைகள் பெரிதுபடுத்த வேண்டாம். நாங்கள் இருவரும் ஆடியோவை வெளியிடவில்லை. எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளோம். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

மாநில தலைவருக்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தவே அந்த ஆடியோவை பரப்பி வருகின்றனர். தி.மு.க.,வின் சைதை சாதிக் போன்றவர்கள் பேசியதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ஆனால், பா.ஜ.,வில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் வெளிப்படைத்தன்மை இது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement