Load Image
dinamalar telegram
Advertisement

டில்லி சென்று நியாயம் கேட்பேன்

திருநெல்வேலி:''கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன். டில்லியில் அகில இந்திய தலைமையை சந்தித்து நியாயம் கேட்பேன்'' என நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் தெரிவித்தார்.

காங். கட்சி நிர்வாகிகள் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு தற்போதைய மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு நியாயம் கேட்க நவ. 15ல் கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு சென்ற போது மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது கட்சி நடவடிக்கை எடுத்து அவரை நேற்று விசாரணை குழு முன் ஆஜராக கடிதம் தந்திருந்தனர்.

ஆனால் ஆஜராகவில்லை.

திருநெல்வேலியில் இருந்தார். எனவே அவரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து விசாரணை குழு தலைவர் அறிக்கை அளித்துள்ளார்.

டில்லிக்கு செல்வேன்



இது குறித்து ரூபி மனோகரன் கூறுகையில் ''நான் கட்சியில் 20 ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். தற்போது மாநில பொருளாளராகவும் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளேன்.

என்னுடைய விளக்கம் கேட்காமல் என்னை கட்சியை விட்டு 'சஸ்பெண்ட்' செய்தது சரியல்ல. என்னை மட்டும் விசாரித்தால் போதுமா.சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும். நான் நியாயம் கேட்டு டில்லி தலைமைக்கு செல்வேன்.

என் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைமைக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது. தேவைப்பட்டால் உடனடியாக மாநில தலைமையிடம் சென்று விளக்கம் அளிப்பேன்'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement