Load Image
dinamalar telegram
Advertisement

வேட்டிக்கான நுாலை வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்யுங்கள்: நெசவாளர்கள்

ஈரோடு:வேட்டிக்கான நுாலை கூட்டுறவு ஆலைக்கு பதில், வெளிச்சந்தையில் கொள்முதல் செய்து வழங்குமாறு, நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளியோர், ஆதரவற்றவர்கள், விதவை போன்றோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக, 225 கூட்டுறவு விசைத்தறி சங்கங்களில், 61 ஆயிரம் விசைத்தறி மூலம், 1.20 கோடி வேட்டி தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:

இலவச வேட்டி, சேலை ஆர்டரில், ஈரோடு, திருச்செங்கோட்டில், 80 சதவீத ஆர்டரும், கோவை, திருப்பூர் சரகங்களில் மீதி பணியும் நடக்கிறது.

தமிழக அரசு கூட்டுறவு நுாற்பாலைகள் மூலம் உற்பத்தியான நுால், 20 சதவீதம் வந்துள்ளது.

பஞ்சின் தரம், நுாலின் தரமும் மோசமாக உள்ளதால், 24 மணி நேரத்தில், 14 வேட்டிகள் உற்பத்தியாகும் விசைத்தறியில், எட்டு முதல், 10 கூட உற்பத்தி செய்ய முடியவில்லை.

நுால் தரமற்று அறுந்து போவதால், பல தறிக்காரர்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். கூட்டுறவு மில்லில், 40 கவுண்ட் நுால் 1 கிலோ, 387 ரூபாய்க்கு வாங்குகின்றனர். வெளி மார்க்கெட்டில் தரமான நுால், 300, 310 ரூபாய்க்கே கிடைக்கிறது.

எனவே, ஒப்பந்ததாரர்களை நம்பாமல், அரசு நேரடியாக தலையிட்டு, வெளி மார்க்கெட்டில் தரமான நுாலை வாங்கி வழங்கினால், இப்பணியை நிறைவு செய்ய வாய்ப்பாகும்.

தரமற்ற நுாலால் அரசுக்கு உரிய நேரத்தில் வேட்டி, சேலை வழங்க இயலாததுடன், நெசவாளர்களுக்கும் பாதி கூலி பறிபோகிறது.

இவ்வாறு கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement