Load Image
dinamalar telegram
Advertisement

ம.பி.,யில் கைப்பந்து போட்டி தமிழக அணிக்கு கோப்பை

Tamil News
ADVERTISEMENT
சென்னை:சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஏ.எஸ்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், கைப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 17 வயதுள்ள 12 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

கடந்த மாதம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், இவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்தனர்.

தொடர்ந்து, ம.பி., மாநிலம் மாந்தோ மாவட்டத்தில், இம்மாதம் 21ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில், பனையூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் இடத்தை பிடித்தது. இவர்களுக்கு, மெடல், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement