Load Image
dinamalar telegram
Advertisement

கீழடியில் சொத்து விபரம் சேகரிப்பு நில உரிமையாளர்கள் அதிருப்தி

திருப்புவனம்:கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களின் சொத்து விபரங்களை, வருவாய்த் துறையினர் சேகரிப்பதால் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வு பணிகளுக்காக, 4.5 ஏக்கர் நிலம், 17 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற, நில உரிமையாளர்களிடம் அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

நில உரிமையாளர்கள் கூறியதாவது:

நான்கு வழிச்சாலையை ஒட்டி, 1 சென்ட் நிலம், 4 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. நாங்கள், 3 லட்சம் ரூபாய் கேட்டோம். அரசு தரப்பில் வெறும், 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என, தெரிவித்தனர்.

இந்நிலையில், திடீரென எங்களின் வீடு, நிலம், வாகனம், மொபைல் போன், குழந்தைகள், அவர்களின் படிப்பு உள்ளிட்ட விபரங்களை வருவாய்த்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

பண்டைய தமிழர்கள் பற்றிய ஆவணங்களை தேடஉதவியதற்கு, எங்களுக்கு தரும் பரிசு, எங்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது தான் போலும். அரசின் இந்த செயலால்நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement