பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவருக்கு எலும்பு முறிவு
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில், மாணவனுக்கு கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் நரேஷ், 17; காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
பள்ளியில் உள்ள கழிப்பறை மறைப்பு சுவர் அருகே, நரேஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சுவர் இடிந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நரேஷுக்கு, இரண்டு கால் பாதங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏழை கூலித் தொழிலாளர்களின் மகனான அவருக்கு படிப்பு பாதிக்காத வகையில், உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!