Load Image
dinamalar telegram
Advertisement

விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி

Tamil News
ADVERTISEMENT
திண்டிவனம்:விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு தராததால், அரசு பஸ் 'ஜப்தி' செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 36; சாப்ட்வேர் இன்ஜினியர்.

இவர் கடந்த 2012ல் அதே பகுதியிலுள்ள சாலையை கடக்க முயன்ற போது, அரசு பஸ், மோதியது. இதில் காயமடைந்த சுரேஷ் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். படுகாயம் அடைந்த அவர், நடக்க முடியாமல் வீட்டில் உள்ளார்.

விபத்து குறித்து சுரேஷ் சார்பில் திண்டிவனம் இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பிறகு கடந்த 2018ல், மனுதாரருக்கு அரசு போக்குவரத்து கழகம் 65 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பு கூறி பல மாதங்கள் ஆகியும், நஷ்ட ஈடு வழங்கவில்லை என்பதால், மனுதாரர் சார்பில் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ரகுமான், மனுதாரருக்கு, 1.22 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன் பேரில் கோர்ட் கட்டளை நிறைவேற்றுநர் மல்லிகா மற்றும் ஊழியர்கள் சென்னையிலிருந்து திண்டிவனம் வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட்டிற்கு எடுத்து சென்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement