Load Image
dinamalar telegram
Advertisement

டிஜிட்டல் மீடியா கட்டுப்பாடுகள்: விரைவில் மசோதா தாக்கல்

Tamil News
ADVERTISEMENT

ஜெய்ப்பூர் 'டிஜிட்டல் மீடியா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும், கட்டுப்படுத்தும் வகையில், விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது' என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.இதில் அவர் கூறியுள்ளதாவது:

செய்தி என்பது ஒரு காலத்தில் ஒரு வழிப் பாதையாக இருந்தது. மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் வளர்ச்சியால், செய்திகள் என்பது பலமுனையாக மாறியுள்ளன. சிறிய கிராமங்களில் நடக்கும் விஷயம் கூட தேசிய அளவில் எதிரொலிக்கிறது.
Latest Tamil News
டிஜிட்டல் மீடியா புதிய வாய்ப்புகளை உருவாக்கிஉள்ள அதே நேரத்தில், புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சமநிலை இருக்கும் வகையில், இந்த மீடியாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை.

அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் சுயமாக கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வதையே மத்திய அரசு விரும்புகிறது. இருப்பினும் நாட்டின் நலன், ஊடகங்களின் நலன், அதில் பணிபுரிவோரின் நலனுக்காக சில கட்டுப்பாடுகள் தேவை.

இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.ஊடகங்கள் தங்களுடையபொறுப்புகளை, கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.அரசின் குறைகளை சுட்டிக் காட்டும் அதே நேரத்தில், மக்களின் நலனுக்கான திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement