Load Image
dinamalar telegram
Advertisement

அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு பெற 10 எழுத்தாளர்கள் தேர்வு

Tamil News
ADVERTISEMENT
சென்னை:நடப்பாண்டில், அரசின் கனவு இல்ல திட்டத்தில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி உள்ளிட்ட, 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது.

கனவு இல்ல திட்டத்தில் தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தை, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, ஜூன் 3ல் முதல்வர் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டு கனவு இல்லம் திட்டத்திற்கு, தமிழ் எழுத்தாளர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற திலகவதி, எம்.பி., வெங்கடேசன், ராமகிருஷ்ணன், ஜோ.டி.குரூஸ், கல்யாணசுந்தரம்; கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கோதண்டராமன், மருத நாயகம், மறைமலை இலக்குவனார், ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன தொல்காப்பியர் விருது பெற்ற கலைக்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement