ADVERTISEMENT
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி மணல் தீடையில் தவித்த இலங்கை அகதிகள் ஐந்து பேரை 'மரைன்' போலீசார் மீட்டனர்.
இலங்கை மன்னாரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி, 34, அவரது மனைவி ரஜினி, 29, மகள்கள் கஜானா, 13, டயானா, 11, மகன் ஜாய்சன், 5, ஆகியோர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இலங்கை படகோட்டிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து, 2 கி.மீ.,யில் உள்ள ஒன்றாம் மணல் தீடையில் நேற்று அதிகாலை இவர்களை இறக்கி விட்டு இலங்கை திரும்பினர்.
ஐந்து பேரையும் மண்டபம் மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் மீட்டு விசாரித்தனர். பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!