Load Image
dinamalar telegram
Advertisement

ராணுவத்தை நக்கல் அடித்த நடிகை எதிர்ப்பு வலுத்ததால் அந்தர் பல்டி

Tamil News
ADVERTISEMENT


மும்பை, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன படையினருடன் நடந்த சண்டையில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களை நக்கல் அடிப்பதை போல பதிவிட்ட பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா, தன் செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

கடந்த 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தபோது, நம் ராணுவ வீரர்களுக்கும், சீன படையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த மோதலில், நம் தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் உபேந்திரா திவேதி சமீபத்தில் பேசும் போது, 'மத்திய அரசு உத்தரவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாக்.,கிடம் இருந்து முழுமையாக திரும்ப பெற நாங்கள் தயாராக உள்ளோம்' என கூறி இருந்தார்.

இந்தக் கருத்தை, ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதை மறுபதிவு செய்த பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா, 'கல்வான் ஹாய் சொல்கிறது' என, குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போல், நம் வீரர்கள் பலியாவார்கள் என அர்த்தம் வரும் வகையில், அவர் நக்கலாக கூறிய கருத்து, பலரது மனங்களை புண்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, ரிச்சாவின் சமூக வலைதள பக்கத்தில் பலர் அவரை வசை பாடினர். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனால் அதிர்ந்து போன நடிகை ரிச்சா, சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:

எந்தவித உள்நோக்கத்துடனும் அந்த பதிவை எழுதவில்லை. ஒருவேளை என் கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

என் தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியவர் தான். 1962 சீனப் போரில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ராணுவ வீரர்களின் தியாகங்களை என் குடும்பம் அறியும். அவர்களை மதிக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement