ADVERTISEMENT
சென்னை:
மேலும் தலைமறைவு குற்றவாளிகளாக, சென்னையைச் சேர்ந்த ராஜசேகர், நாராயணி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ், விருதுநகரைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஐ.எப்.எஸ்., என்ற நிதி நிறுவனம், 1 லட்சம் பேரிடம், 6,௦௦௦ கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
இதன் முக்கிய நிர்வாகிகள், வேலுார் சத்துவாச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன் மற்றும் வேலுார் பெருமாச்சியைச் சேர்ந்த மோகன்பாபு ஆகியோர். 'ஹிஜாவு அசோசியேட்ஸ்' என்ற நிதி நிறுவனம், 4,500 பேரிடம், 600 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது.
இதன் இயக்குனர்களாக, காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுாரைச் சேர்ந்த அலெக்சாண்டர், அவரது தந்தை சவுந்தரராஜன் ஆகியோரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், 9,௦௦௦ கோடிக்கு ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்.
தகவல் அளிப்போரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
பொதுமக்கள், சென்னை, அசோக் நகரில் உள்ள, காவலர் பயிற்சி கல்லுாரியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, 044 - 22504311 மற்றும் 044 - 22504332 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.9,000 கோடி மோசடி
பொதுமக்களிடம் முதலீடாக பெற்று, 9,௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முக்கிய புள்ளிகளை, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 'தலைமறைவு குற்றவாளிகள்' என அறிவித்துள்ளனர்.
தனியார் நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள், பொது மக்கள் செய்யும் முதலீடு தொகையுடன், ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.
மேலும் தலைமறைவு குற்றவாளிகளாக, சென்னையைச் சேர்ந்த ராஜசேகர், நாராயணி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ், விருதுநகரைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஐ.எப்.எஸ்., என்ற நிதி நிறுவனம், 1 லட்சம் பேரிடம், 6,௦௦௦ கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
இதன் முக்கிய நிர்வாகிகள், வேலுார் சத்துவாச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன் மற்றும் வேலுார் பெருமாச்சியைச் சேர்ந்த மோகன்பாபு ஆகியோர். 'ஹிஜாவு அசோசியேட்ஸ்' என்ற நிதி நிறுவனம், 4,500 பேரிடம், 600 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது.
இதன் இயக்குனர்களாக, காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுாரைச் சேர்ந்த அலெக்சாண்டர், அவரது தந்தை சவுந்தரராஜன் ஆகியோரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், 9,௦௦௦ கோடிக்கு ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்.
தகவல் அளிப்போரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
பொதுமக்கள், சென்னை, அசோக் நகரில் உள்ள, காவலர் பயிற்சி கல்லுாரியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, 044 - 22504311 மற்றும் 044 - 22504332 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!