ADVERTISEMENT
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயில் கதவின் பூட்டை உடைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலுக்கு, தெற்கு வாயில் வழியாக நந்தனார் வந்ததாகவும், மூடிக் கிடக்கும் தெற்கு வாயிலை திறக்க வேண்டும் என, பல்லாண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், சுவர் எழுப்பி அடைக்கப்பட்டிருந்த தெற்கு வாயிலில் உள்ள மிகப்பெரிய இரும்பு கேட்டில் பூட்டப்பட்டிருந்த இரு பூட்டுகளை, இளைஞர் ஒருவர் கையில் வைத்திருந்த கம்பியால் நேற்று முன்தினம் இரவு உடைத்தார்.
அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிதம்பரம் கனகசபை நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த், 31, என்பவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில், நீண்ட காலமாக அந்த கதவின் பூட்டை உடைக்க வேண்டும் என்று எண்ணி இருந்ததாகவும், அதன்படி செய்ததாகவும் ஆனந்த் தெரிவித்தார். தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி மற்றும் போலீசார், பூட்டு உடைக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!