விஷ ஊசி செலுத்தி மனைவி கொலை தற்கொலை நாடகமாடிய கணவர் கைது
புனே, :மஹாராஷ்டிராவில் விஷ ஊசி செலுத்தி மனைவியை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராக பணியாற்றி வருபவர் ஸ்வப்னில் சாவந்த், 23.
இவர், ஐந்து மாதங்களுக்கு முன் பிரியங்கா க்ஷேத்ரே என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதே நேரத்தில் உடன் பணியாற்றும் செவிலியர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த சாவந்த், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து விஷத்தன்மை உள்ள மருந்தை எடுத்து வந்து மனைவிக்கு ஊசி வாயிலாக செலுத்தியுள்ளார். பின், ஆபத்தான நிலைக்குச் சென்ற மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுஉள்ளார்.
அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். போலீஸ் விசாரணையில் பிரியங்கா கையெழுத்திட்ட தற்கொலை குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சாவந்த் மீது குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.
ஆனால், போலீசார் மேலும் நடத்திய விசாரணையின்போது தான், சாவந்த் தன் மனைவியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததும், அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது. உடனே போலீசார், சாவந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!