Load Image
dinamalar telegram
Advertisement

சூர்யா 6 மாதம் சஸ்பெண்ட் பா.ஜ., அண்ணாமலை உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
சென்னை:'பா.ஜ., பொறுப்பில் இருந்து ஆறு மாத காலத்திற்கு சூர்யா சிவா நீக்கப்படுகிறார். கட்சியின் தொண்டனாக, அவர் பணியாற்றலாம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரண், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து, கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் நடந்த ஒழுங்கு நடவடிக்கை குழு முன் இருவரும் ஆஜராகி, இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர்.

பெண்களை இழிவுப்படுத்துவதை ஒருபோதும் பா.ஜ., ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் இருவரும் சுமுகமாக சென்றாலும், நான் ஏற்க மறுக்கிறேன்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை, சூர்யா சிவா ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், அவர் பொறுப்பில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

கட்சியின் ஒரு தொண்டனாக, கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (4)

  • John Miller - Hamilton,பெர்முடா

    கை புண்ணை பார்க்க எதெற்கு கண்ணாடி? இந்த ஆடியோவை வெளியிட்ட கருப்பு முருகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்க அண்ணாமலைக்கு ஏன் பயம்?

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    இதுபோன்றவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்...

  • vbs manian - hyderabad,இந்தியா

    தமிழக ப ஜெ க சறுக்கிகிறது.

    • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

      கண்டவர்களை உள்ள விட்டதால் வந்த வினை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement