Load Image
Advertisement

உச்ச நீதிமன்ற தகவல் அறிய ஆர்.டி.ஐ., இணையதளம்



புதுடில்லி, உச்ச நீதிமன்றம் குறித்து, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான இணையதளம் செயல்படத் துவங்கியது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றம் குறித்த தகவல்களைப் பெற தபால் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும்.

இதை, 'ஆன்லைன்' வாயிலாக பெறுவதற்கான நடைமுறையை உருவாக்கக் கோரி, அக்ருதி அகர்வால், லட்சயா புரோஹித் என்ற சட்ட மாணவியர்வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

கடந்த ௧௧ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இணையதளம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இணையதளம் நேற்று செயல்படத் துவங்கியது.

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று கூறியதாவது:

ஆர்.டி.ஐ., இணையதளம் செயல்படத் துவங்கியுள்ளது. இனி, உச்ச நீதிமன்றம் குறித்த தகவல்களை ஆன்லைன் வாயிலாகவே பெறலாம்.

இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் தெரிவிக்கலாம். அவற்றை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement