Load Image
dinamalar telegram
Advertisement

போலி தொலைதொடர்பு அலுவலகம் திரிபுரா வாலிபர் உட்பட 2 பேர் கைது

Tamil News
ADVERTISEMENT
சென்னை:வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஜாகீர் உசேன், 19, சல்மான் ஷெரீப், 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி நடக்கிறது.

இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம் என, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகள், சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அந்த பகுதியில், போலியாக தொலைதொடர்பு அலுவலகம் செயல்படுவதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, ஐ.பி., அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் போலீசார், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ஆகியோர், நேற்று முன்தினம் மாலையில், சட்ட விரோதமாக செயல்பட்ட, போலி தொலை தொடர்பு அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

அப்போது, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 19, இவரது கூட்டாளி வேலுார் மாவட்டம், குணவட்டத்தைச் சேர்ந்த சல்மான் ஷெரீப், 29, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். கிடுக்கிப்பிடி விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதன் பின், கைது செய்யப்பட்டனர்.

ஜாகீர் உசேன் அளித்துள்ள வாக்குமூலம்:

சென்னையில், ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். வேலுாரில் போலியாக தொலைதொடர்பு அலுவலகம் நடத்தி, பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்துள்ள சல்மான் ஷெரீப் அறிமுகம் ஆனார்.

இருவரும், அமைந்தகரையில் வாடகைக்கு வீடு எடுத்து, போலி தொலை தொடர்பு அலுவலகம் நடத்துவது என, முடிவு செய்தோம்.

அதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக, வங்க தேசத்தைச் சேர்ந்த மஹ்மூதிடம், நான்கு 'சிம்பாக்ஸ்' கருவிகள், 130 'சிம் கார்டு'கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். அவரின் ஆலோசனைப்படி, போலி தொலை தொடர்பு அலுவலகம் அமைத்தோம். அதற்காக அவரிடம், 35 ஆயிரம் ரூபாய் வாங்கினோம்.

எங்கள் அலுவலகத்தை 'ஆன்லைன்' வாயிலாக மஹ்மூத் கண்காணித்தார். வெளிநாடுகளுக்கான அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதன் வாயிலாக, எங்களுக்கு அதிகளவில் பணம் கிடைத்தது. ஜாலியாக ஊர் சுற்றுவது, உல்லாசம் அனுபவிப்பது என இருந்தோம்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement