Load Image
dinamalar telegram
Advertisement

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் புதிதாக சட்டக் கல்லுாரி துவக்கம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை:தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில், புதிதாக சட்ட கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. இங்கு, மூன்று வகை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

திருச்சி சமயபுரத்தில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலையின் சார்பில், சட்டக் கல்லுாரி துவக்க விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. பல்கலையின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சுயநிதி தொழிற்கல்வி கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு தலைவர் வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் முன்னாள் துணைவேந்தருமான வணங்காமுடி ஆகியோர், முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பல்கலையின் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், ''மாணவர்கள் பெற்றோரிடமும், வயதில் மூத்தவர்களிடமும், பணிவுடனும், மதிப்புடனும் நடந்து, அவர்களின் ஆசீர்வாதத்துடன் வாழ வேண்டும்,'' என்றார்.

சிறப்பு விருந்தினர் வெங்கட்ராமன் பேசுகையில், ''மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும், அனைத்து தடைகளில் இருந்தும் வெளியே வர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். இலக்குகள் நிர்ணயித்து, அதை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையின் சட்ட கல்லுாரியில், நடத்தப்படும், பி.ஏ., - எல்.எல்.பி., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் பி.காம்., - எல்.எல்.பி., ஆகிய படிப்புகளின் சேர்க்கை மற்றும் வருங்கால வேலைவாய்ப்புகள் குறித்து, பல்கலையின் இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், துணைவேந்தர் ரஞ்சன் ஆகியோர் விளக்கினர்.

பல்கலையின் செயலர் நீல்ராஜ், பதிவாளர் ரவிச்சந்திரன், பல்கலையின் கல்லுாரி முதல்வர்கள் சேகர், துளசி, பேச்சியம்மாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement