Load Image
dinamalar telegram
Advertisement

புதுப்பட்டினத்தில் வாகன சோதனை பாதிப்பதாக வியாபாரிகள் முறையீடு

புதுப்பட்டினம்:கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம் ஊராட்சி ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்ததாக அணுசக்தி துறை உள்ளது. நகரிய பகுதியினருக்கு, புதுப்பட்டினமே, வர்த்தக பகுதியாக உள்ளது.

நகரிய பகுதியை, பழைய கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் புதிய பாலம் சாலையில், பிரதான கடைகள் நிறைந்து, வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

இச்சூழலில், காலை, மாலையில் ஏராளமான வாகனங்கள் கடப்பதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கிடையே, குறுகிய நீளமே உள்ள இச்சாலை பகுதியில், நகரிய நுழைவாயில், பழைய கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதிகளில், போலீசார், வாகன சோதனை நடத்துவதால், மேலும் நெரிசல் அதிகரித்து, வியாபாரம் பாதிப்பதாக, வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வாகன சோதனையை, வியாபாரிகள் பாதிக்காதவாறு, வேறு இடம் மாற்ற, வணிக சங்க தலைவர் காதர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனிடம், கோரிக்கை மனு அளித்து முறையிட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement