Load Image
dinamalar telegram
Advertisement

புதிய பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட கப் தாங்கமுடியல

Tamil News
ADVERTISEMENT

வாகனங்களால் நெரிசல்



வால்பாறை, தபால் நிலையம் எதிரே உள்ள பள்ளியின் முன், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களை அழைத்து வர செல்லும் வாகனங்கள், ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின் றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை, போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.

- -வசந்த், வால்பாறை.

புதர்மண்டிய ரோடு



பொள்ளாச்சி, எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி க்கு உட்பட்ட ரோட்டில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெரிவதில்லை. புதர் அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசாமி, எஸ்.பொன்னாபுரம்.

குப்பை குவிப்பு



பொள்ளாச்சி துரைஸ் சினிமா தியேட்டர் அருகே, ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

- மாரியப்பன், பொள்ளாச்சி.

பஸ் ஸ்டாண்டில் நெரிசல்



வால்பாறை, காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில், மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய நேரத்தில் பஸ்களை பிடிக்க முடியவில்லை. போலீசார் கவனித்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

- -காயத்ரி, வால்பாறை.

ரோடு படுமோசம்



ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. அலுவலகம் அருகில் ரோடு சேதமடைந்து இரண்டு மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

- -துரைஆறுமுகம், வேட்டைக்காரன்புதுார்.

ரோட்டில் பள்ளம்



பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, சந்தை பேட்டை ரோடு சந்திக்கும் இடத்தில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி மெதுவாக செல்லும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

- திருக்குமரன், பொள்ளாச்சி.

கழிப்பிடம் பராமரிப்பில்லை



பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தண்ணீர், கிருமிநாசினி ஊற்றி அடிக்கடி சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பிடத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.

- குமரேசன், பொள்ளாச்சி.

ரோட்டோர புதரால் அச்சம்



பொள்ளாச்சி, டி.காளிபாளையத்தில் இருந்து, புரவிபாளையம் செல்லும் ரோட்டின் இருபக்கமும், புதர் சூழ்ந்துள்ளது. விஷப்பூச்சிகளும் அதிகம் உள்ளன. புதர் அகற்றி, வாகன போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும்.

- மதன்குமார், புரவிபாளையம்.

'பார்க்கிங்' பிரச்னை



பொள்ளாச்சி கடைவீதியில், அனைத்து ரோடுகளிலும் இருபுறமும் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. இதனால், கடைவீதி ரோடுகளில் நெரிசல் அதிகரித்துள்ளது, வாகனங்களில் பயணிப்பது சிரமமாக உள்ளது. வாரம் ஒரு முறை ஒரு பக்கம் 'பார்க்கிங்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

- குணசேகரன், பொள்ளாச்சி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement