Load Image
dinamalar telegram
Advertisement

மூன்று இடங்களில் திருட்டு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மயிலை ஊராட்சியில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூட்டை உடைத்து, பித்தளை குடம் மற்றும் பூஜை பொருட்களை, கடந்த 22ம் தேதி, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

அதேபோல், மயிலை பகுதியைச் சேர்ந்த சம்சுதின், 53, என்பவர், காயலான் கடையில் குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றின் மோட்டார்கள் உள்ளிட்ட, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, தேவராஜ், 50, என்பவர் குடோனில், பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, ஐந்து தண்ணீர் மோட்டார்கள் திருடு போயின.

கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் அருகே உள்ள வெங்கூர் கிராம காயலான் கடையில், மர்ம நபர்கள் விற்றதை அறிந்த தேவராஜ், திருப்போரூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து, வெங்கூர் காயலான் கடையில் மோட்டார்களை பறிமுதல் செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement