Load Image
Advertisement

வேர்க்கடலை சாகுபடி பயிற்சி

  வேர்க்கடலை சாகுபடி பயிற்சி
ADVERTISEMENT
மறைமலை நகர்:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்றுனர்களுக்கு வேர்க்கடலை சாகுபடி மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சித்தார்த் துவக்கி வைத்தார். இதில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியில் வேர்க்கடலை சாகுபடி செய்யும் முறைகள், உர மேலாண்மை, வேர்க்கடலையின் ரகங்களான வி.ஆர்.ஐ. - 9, வி.ஆர்.ஐ. - 10 போன்றவை பயிரிடுவது, பயிர் வளர்ச்சியின் போது கவனிக்கப்பட வேண்டியவை, இயற்கை முறையில் வேர்க்கடலை சாகுபடி குறித்து உதவி பேராசிரியை காயத்தி விளக்கினார்.

வேர்க்கடலையில் இருந்து எவ்வாறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது, அதை சந்தைபடுத்தும் முறைகள் போன்றவை குறித்து இணை பேராசிரியர் விமலா ராணி விளக்கினார்.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதே வளாகத்தில் மற்றொரு அரங்கில் மசாலா பொருட்கள் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement