Load Image
dinamalar telegram
Advertisement

லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ்!

சென்னை:தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிமென்ட் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:

கடந்த 2018 முதல் 2021 வரை, சிமென்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளால், அரசுக்கு பல நுாறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறி ஊழியர்கள் நியமனம் நடந்துள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 7க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement