ADVERTISEMENT
தஞ்சாவூர் :கும்பகோணம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது, எட்டு ஆண்டுகளாக அளித்த மனுக்களை மாலையாக அணிந்து, விவசாயி ஒருவர் கூட்டத்தில் பங்கேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பூர்ணிமா தலைமையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, மத்திய அரசு, 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா' திட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு உதவித்தொகை பெற, ஆதார் இணைப்பு கட்டாயமாக்குவதை கண்டித்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். நெல்லுக்கு கூடுதல் ஆதார விலையை வழங்கும் கேரளா, சத்தீஸ்கர் முதல்வர்களை பாராட்டி விவசாயிகள், அனைவருக்கும் பழங்களை வழங்கினர்.
அப்போது, நாச்சியார்கோவிலைச் சேர்ந்த விவசாயி கோவிந்த வல்லப்பந்த் கூறியதாவது: எட்டு ஆண்டுகளாக நாச்சியார்கோவில், திருநறையூர் மற்றும் சமத்தனார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள திருக்குளம், சித்தநாதசுவாமி, ராமநாதசுவாமி, தேரடி குளம், வடகட்டளைக்குளம். வண்ணார்குளம், சமத்தனார்குடி ஆகிய குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன வாய்க்காலை துார்வார கோரி, பல முறை மனுக்கள் கொடுத்தேன்.
போராட்டங்கள்,உண்ணாவிரதம் இருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விரைவில் அந்த குளங்களை மீட்க வேண்டும்.இவ்வாறு கூறிய அவர், எட்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து, கையில் தேசிய கொடியை ஏந்தியபடிநின்றிருந்தார்.

வாசகர் கருத்து (2)
சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் குளங்களை தூர் வாரி மேம்படுதி அரசு நீர் வள ஆதார அமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை அல்லது மத்திய நீர்வளத்துறை மூல் தண்ணீர் பெற முயற்சி செய்ய முடியும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அரசு முதலில் விவசாயிகளை கவனித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.விவசாயி நம் நாட்டு உணவு பொருட்களை உற்பத்தி பாதுகாப்பவர்கள்.