Load Image
Advertisement

பிஸ்லரி நிறுவனத்தை ரூ. 7 ஆயிரம் கோடிக்கு வாங்க டாடா குழுமம் முயற்சி

 பிஸ்லரி நிறுவனத்தை ரூ. 7 ஆயிரம் கோடிக்கு வாங்க டாடா குழுமம் முயற்சி
ADVERTISEMENT

புதுடில்லி,: 'டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்' நிறுவனம், 'பிஸ்லரி இன்டர்நேஷனல்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
பிரபல தொழிலதிபரான ரமேஷ் சவுகான், அவரது தண்ணீர் வணிகமான பிஸ்லரி இன்டர்நேஷனலை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும்; டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனமும் அதில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமமும், கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான தாக்கலில், பிஸ்லரி நிறுவனத்தை வாங்க பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
Latest Tamil News

இருப்பினும், டாடா நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிஸ்லரியை வாங்க இருப்பதாக உலா வரும் செய்திகளை, சவுகான் மறுத்துள்ளார். அத்துடன், டாடா நிறுவனத்துக்கு விற்பது குறித்து, இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னுடைய மகள் ஜெயந்தி இந்த வணிகத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும்; ஆனால், வணிகத்தை அப்படியே விட்டு விட முடியாது என்பதால், வேறு யாராவது தொடர்ந்து நடத்த விரும்புவதாகவும், 82 வயதாகும் ரமேஷ் சவுகான் கூறியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், சவுகான் தன்னுடைய குளிர்பான பிராண்டுகளான 'தம்ஸ்அப், கோல்டு ஸ்பாட், சிட்ரா, மாஸா, லிம்கா' ஆகியவற்றை, 'கோக - கோலா'வுக்கு விற்பனை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


வாசகர் கருத்து (13)

  • தாமரை - ,

    பிஸ்லெரி உரிமையாளர் Mr chougan அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை மேலும் அவருடைய ஒரே பெண்ணிற்கு இந்த தொழிலை செய்ய விருபபம் இல்லை எனவே அவரின் வயது மூப்பின் காரணமாக விitபனை செய்கிறார்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    வல்லவன் வகுத்ததே வாய்க்கால் ,இந்தியாவில் இனி வரும் காலங்களில் காசு வைத்திருக்கிறவன் நன்றாக ஆடுவான் காசில்லாதவன் ஒண்ணுமே இல்லாம சீரழியனும் ,பல பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை கபளீகரம் செய்து விடும் .சிறிய நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக நொடிக்கும் ,தண்ணீரின் விலை தாறுமாறாக உயரும் .உதாரணத்திற்கு சாதரண உப்பு மிகவும் விலை குறைவு ,ஆனால் டாடா உப்பு பல மடங்கு விலை அதிகம் .இதேதான் எல்லாப்பொருட்களின் விஷயத்திலும் நடக்கும் .விலைவாசி இனி வரும் காலங்களில் தாறுமாறாக உயரும் என்பது மட்டும் நிச்சயம் . ஜி.எஸ்.ராஜன், சென்னை ,

  • ஆரூர் ரங் -

    முன்பு தன்னிடம் COCO COLA வாங்கிய பிறகு தனது பிராண்டு குளிர்பானங்களை COCO COLA உற்பத்தி செய்யாமல் நிறுத்திய போது ஆத்திரப்பட்டு பிராண்டுகளை மீட்க கோர்ட்க்குப் போவேன் என்று கூறினாராம். இப்போது😒?

  • ஆரூர் ரங் -

    1969 இல் சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கி மேம்படுத்தி 7000 கோடிக்கு விற்கிறார்கள். அவங்கவங்க சாமர்த்தியம். வாரிசுகளுக்கு ஆர்வம் இல்லாத நிலையில் நிறைய😒 நிறுவனங்கள் விற்கப்படுகின்ற வரலாறு உண்டு .

  • dsfsf - chennai,இந்தியா

    நாட்டில் ஒவ்வொன்றாக அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முயற்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்