Load Image
dinamalar telegram
Advertisement

மாதம் 1,000 ரூபாய் முதலீடு...இன்றைய மதிப்பு 86 லட்ச ரூபாய்!

Tamil News
ADVERTISEMENT
பங்கு சார்ந்த மியூட்சுவல் பண்ட் திட்டங்களில் நீண்ட கால நோக்கத்துடன் முதலீட்டினை பொறுமையுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு அத்திட்டங்கள் லாபத்தை வாரி வாரி வழங்கியிருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 20 ஆண்டுகால லாபம் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் சிறந்த சந்தைகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 30 ஆண்டுகால லாபம் அடிப்படையில் இந்தியா 5வது சிறந்த சந்தையாக உள்ளது. இந்தியப் பங்குகள் வளர்ச்சியின் மூலம் மியூட்சுவல் பண்ட்கள் பலனடைந்துள்ளன.

இந்திய மியூட்சுவல் பண்ட் துறையின் மதிப்பு 40 லட்சம் கோடி ரூபாய். இங்கு 235 பங்குசார்ந்த மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அதில் 31 திட்டங்கள் 25 ஆண்டுகளாக சந்தையில் உள்ளன. அவற்றில் கடந்த 25 ஆண்டுகளில் மிகச் சிறந்த லாபம் வழங்கிய டாப் 10 பண்டுகளைப் பற்றி பார்க்கலாம். இந்த பண்டுகளில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்திருந்தால் அந்தப் பணத்தில் இன்று சென்னையின் முக்கியப் பகுதியில் ஒரு வீட்டையே உங்களால் சொந்தமாக்கிக் கொண்டிருக்க முடியும். அந்தளவிற்கு முதலீடு பல்கி பெருகியுள்ளது. (ஆதாரம்: ACEMF)

நிப்பான் இந்தியா க்ரோத் பண்ட் - ரூ.86 லட்சம்



Latest Tamil News இது முன்னர் ரிலையன்ஸ் க்ரோத் பண்ட் என்றிருந்தது. பின்னர் நிப்பான் நிறுவனம் இதனை வாங்கியது. 25 ஆண்டுகளில் லாபத்தை வாரி வழங்கியதில் இந்த பண்ட் முன்னணியில் உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மிட்கேப் பங்குகளில் கவனம் செலுத்துகிறது. கடந்த 25 ஆண்டுகளாக மாதம் ரூ.1,000 என எஸ்.ஐ.பி.,யில் முதலீடு செய்து வந்திருந்தால், இன்று ரூ.86 லட்சம் சேர்ந்திருக்கும். முதலீடு செய்த தொகை வெறும் ரூ.3 லட்சம். ஆண்டுக்கு சராசரியாக 22% வளர்ந்துள்ளது.

பிராங்க்ளின் இந்தியா பிரைமா பண்ட் - ரூ.74 லட்சம்



Latest Tamil News இதுவும் இந்தியாவின் பழமையான முதலீட்டு திட்டம். இந்த மியூட்சுவல் பண்ட் ஆரம்பத்திலிருந்து மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. 2008 முதல் ஜானகிராமன் என்பவர் இந்த திட்டத்தை நிர்வகிக்கிறார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து எஸ்.ஐ.பி., மூலம் மாதம்தோறும் ரூ.1,000 கட்டி வந்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ.74 லட்சம்.

ச்.டி.எப்.சி., டேக்ஸ் சேவர் பண்ட் - ரூ.72 லட்சம்



Latest Tamil News இது லார்ஜ் கேப் எனும் பெரு நிறுவனப் பங்கு சார்ந்த வரி சேமிப்புத் திட்டம். சமீபத்திய இதன் டிராக் ரெக்கார்ட் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையில் முன்னணி வகித்தது. இதில் முதலீடு செய்தவர்களின் பணம் 23 மடங்கு பெருகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் ரூ.1,000 எஸ்.ஐ.பி., தொடங்கியவர்களின் இன்றைய மதிப்பு ரூ.72 லட்சம்.

எச்.டி.எப்.சி., ப்ளெக்சிகேப் பண்ட் - ரூ.69 லட்சம்



பெயரிலேயே புரிந்திருக்கும் இந்த பண்ட் நிறுவனங்களின் சந்தை மதிப்பை கணக்கில் கொள்ளாமல் கலந்துக்கட்டி முதலீடு செய்யும். இதனால் ரிஸ்க் குறையும். இத்திட்டத்தில் ரூ.1,000த்துடன் 1997ல் எஸ்.ஐ.பி., தொடங்கியிருந்தால் இன்று உங்கள் கைகளில் ரூ.69 லட்சம் இருக்கும். உங்கள் பாக்கெட்டில் இருந்து சென்ற தொகையோ வெறும் ரூ.3 லட்சமாக இருக்கும்.

ப்ராங்க்ளின் இந்தியா ப்ளெக்சிகேப் பண்ட் - ரூ.58 லட்சம்.



இந்த பண்ட் ஆரம்பத்தில் பிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் என அறியப்பட்டது. மாதம் ரூ.1,000 எஸ்.ஐ.பி.,யை 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு ரூ.58 லட்சம்.

எச்.டி.எப்.சி., டாப் 100 பண்ட் - ரூ.48 லட்சம்



இந்த பண்ட் 100 லார்ஜ்கேப் பங்குகளில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும். 1997ல் மாதம் ரூ.1,000 எஸ்.ஐ.பி.,யை தொடங்கியிருந்தால் இன்றைய தேதியில் நீங்கள் லட்சாதிபதி. நீங்கள் வைத்திருக்கும் யூனிட்களின் மதிப்பு ரூ.48 லட்சம்.

டாடா மிட்கேப் க்ரோத் பண்ட் - ரூ.48 லட்சம்



இது முன்னர் டாடா க்ரோத் என அழைக்கப்பட்டது. இந்த பண்ட் மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இந்த திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகள் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தவர்களின் பணம் 15 மடங்கு வளர்ந்துள்ளது. அதாவது அதன் இன்றைய மதிப்பு ரூ.48 லட்சம்.

ஸ்.பி.ஐ., லாங் டெர்ம் ஈக்விட்டி பண்ட் - ரூ.46 லட்சம்



இந்த பண்ட் ஒரு ஈ.எல்.எஸ்.எஸ்., வகை பண்ட். அதாவது ரூ.48 ஆயிரம் வரை வரி சேமிப்பு பலன் தரக் கூடிய திட்டம். இத்திட்டம் ப்ளெக்சிகேப் ஆக செயல்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய மாதம் ரூ.1,000 முதலீட்டின் இன்றைய மதிப்பு ரூ.46 லட்சம் ஆகும்.

டி.எஸ்.பி., ப்ளெக்சிகேப் பண்ட் - ரூ.48 லட்சம்



இந்த பண்டில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய ரூ.1,000 மாதாந்திர எஸ்.ஐ.பி.,யின் இன்றைய மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும்.

டாடா லார்ஜ் மற்றும் மிட்கேப் பண்ட் - ரூ.45 லட்சம் @

@

டாடா ஈக்விட்டி ஆப்பர்சுனிட்டிஸ் என முன்னர் அழைக்கப்பட்டது. இந்த பண்ட் மாதாந்திர எஸ்.ஐ.பி.,யான ரூ.1,000-த்தை, 14 மடங்கு பெருக்கி இந்த 25 ஆண்டுகளில் ரூ.45 லட்சமாக வளர்த்துள்ளது.


வாசகர் கருத்து (1)

  • sathya moorthi - Elayirampannai ,இந்தியா

    தகவல் அருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement