Load Image
dinamalar telegram
Advertisement

ஜூம்மா மசூதிக்குள் பெண்கள் நுழைய விதித்த தடை வாபஸ் ?

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் பெண்கள், நுழைய விதிக்கப்பட்ட தடை திடீரென வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது..

டில்லியில் பிரசித்தி பெற்ற ஜூம்மா மசூதி உள்ளது. இதன் தலைமை நிர்வாகி ஷாகி இமாம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் படி மசூதிக்குள் இனி பெண்கள் தனியாக, கூட்டமாகவோ நுழைய அனுமதியில்லை. மேலும் புகைப்படம், வீடியோ எடுத்தல், மொபைலில் செல்பி எடுக்க கூடாது போன்ற உத்தரவுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. Latest Tamil News
இது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ஆண்களுக்கு மட்டும் தான் உரிமையா? பெண்களுக்கு உரிமை இல்லையா என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, மசூதி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியின் புனிதம் என்றென்றும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர வேறு உள் நோக்கம் இல்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


வாசகர் கருத்து (12)

  • Fastrack - Redmond,இந்தியா

    மவுல்வி கன்பியூஸ் ஆகாம இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மாதிரி இருக்கு

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    என்னது பெண்கள் மசூதிக்குள் சென்றால் புனிதம் கெட்டுவிடுமா?

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    இஸ்லாமிய சமயம் பெண்களை எந்த அளவுக்கு நடத்துகிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். இதற்கு எதிராகத்தான் ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் ( முக்காடு ) அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப்போராடி வருகின்றனர். இஸ்லாமிய சமயத்தில் ஜனநாயக உரிமைகளை பெண்கள் போராடி மீட்க வேண்டிய தருணம். முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது யார் நன்மைக்காக? இஸ்லாமிய பெண்களுக்காக. செல் போன் மூலமாக மனைவியை கணவன் விவாகரத்து செய்வதை தடுப்பதற்காக. "முத்தலாக் "தடை சட்டத்தைக்கொண்டு வந்தவர் பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி அவர்கள்.

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    மசூதியில் ஆண்கள் மட்டுமே நுழைய முடியும். பெண்களுக்கு அங்கே இடமில்லை. இஸ்லாம் என்பது ஆணாதிக்க சமயம். கிறித்தவ சமயத்தில் பெண்கள் போதகர்களாக (பாஸ்டர்) ஆக முடியாது. யூத சமயத்திலும் அவ்வாறே.... ஆனால், ஹிந்து மதத்தில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் பெண் (கோதை ஆண்டாள் ) . அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பெண் (காரைக்கால் அம்மையார் ).

  • jagan - Chennai,இலங்கை

    ஷாஹி இமாம் பதவி ஒரு பரம்பரை பதவி. மதரஸாவில் முதல் ரேங்க் வாங்கி, 20 வருடம் பணிபுரிந்தாலும், இப்போதுள்ள ஷாஹி இமாமின் 27 வயது மகன் தான் அடுத்த ஷாஹி இமாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement