Load Image
dinamalar telegram
Advertisement

வீட்டு சுவரை முட்டி தள்ளிய ஒற்றையானை

Tamil News
ADVERTISEMENT
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே வீட்டின் சுவரை முட்டி தள்ளிய ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடம்பூர் அருகே உள்ள நகலுாரை சேர்ந்தவர் மாதப்பன்,39 ஓட்டு வீடு கட்டி வசித்து கொண்டு கூலி வேலை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.விடியற்காலையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு துாங்கி கொண்டிருந்த மாதப்பன் எழுந்து பார்த்தார்.அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பிளிறிக்கொண்டு வந்தது.

யானையை பார்த்ததும் மாதப்பனும்,வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்த அவரது மனைவியும் தலை தெறிக்க ஓடி ஒளிந்து கொண்டனர். பின்பு யானை ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவற்றை முட்டித்தள்ளி இடித்து சேதம் செய்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் மலைகிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து ஆசனுார் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

ஆசனுார் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனுார் அருகே உள்ள அரேபாளையத்தில் இன்று காலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஹாயாக வீதி வழியாக நடந்து சென்றது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி ஒளிந்தனர். பொதுமக்கள் சிலர் வேடிக்கை பார்த்துகொண்டு தங்களது செல்போனில் வீடியோ எடுத்து உலவவிட்டனர். காலை நேரத்தில் ஒற்றை யானை ஊருக்குள் நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement