Load Image
Advertisement

அடுத்தாண்டு இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறையும் : மூடிஸ் கணிப்பு

 அடுத்தாண்டு இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறையும் : மூடிஸ் கணிப்பு
ADVERTISEMENTஅடுத்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருக்குமென சர்வதேச தர நிர்ணய அமைப்பான மூடிஸ் கணித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தர நிர்ணய அமைப்பான மூடிஸ், ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தின் பொருளாதாரம் குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மூடிஸ் இந்தியாவின் ஜி.டி.பி.,வளர்ச்சி 2022ல் 8 சதவீதமாகவும், 2021ல் 8.5 சதவீதமாகவும், 2023ல் 5 சதவீதமாகவும் குறையும் என்று கணித்துள்ளது. இன்று (ஆக.,24) 'மூடிஸ் அனலிடிக்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

அடுத்த ஆண்டு ஆசிய பசுபிக் பிராந்தியம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. எனினும் அதிக வட்டி விகிதம், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவு போன்றவை பெரும் தலைவலியாக இருக்க கூடும். தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை சார்ந்த உள்முதலீடு மற்றும் உற்பத்தி, இந்தியாவில் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம்.

பணவீக்கம் தொடர்ந்தால், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்துக்கு மேல் உயர்த்தும். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும். உலகப் பொருளாதாரத்தில் சீனா மட்டும் பலவீனமானதாக இல்லை. இந்தியாவின் அக்டோபர் மாத ஏற்றுமதி மதிப்பு, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், வளர்ச்சிக்கான வாய்ப்பாக இந்தியா, சீனாவை விட ஏற்றுமதியை குறைவாகவே நம்பியுள்ளது.
Latest Tamil News
ஆசிய பசுபிக் பிராந்திய மூடிஸ் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் காக்ரேன் கூறுகையில், 'இந்தியா, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிற முக்கிய நாடுகள், கோவிட் தொடர்பான லாக்டவுன் திறப்பில் தாமதம், ஐரோப்பிய , அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் மந்தநிலை மற்றும் சீனாவின் மந்தநிலை ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி 2022ம் ஆண்டை விட, 2023ம் ஆண்டு குறைவாகவே இருக்கும்.'

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2021ல் 6 சதவீதத்தில் இருந்து, 2022ல் 3.2 சதவீதமாகவும், 2023ல் 2.7 சதவீதமாகவும் குறையுமென கணித்துள்ளது. உலகளவில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா பிரகாசமான நாடாக உருவெடுக்குமென ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (9)

 • அப்புசாமி -

  ஒரு அமெரிக்க கைக்கூலி. இந்தியாவைப் பத்தி அவிங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. பொருளாதாரம் சும்மா பிச்சுக்கிட்டு போகுது. ரூவாய் மதிப்பு விழவில்லை. டாலர் மதிப்பு எகிறிடுச்சு. இதையெல்லாம் மீறி இந்தியாவில் வளர்ச்சி இல்லேன்னா, நேரு, இந்திரா, மன்மோகன் , ராஜீவ், ராவுள்தான் காரணம்.

 • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

  இந்த மாதிரி அறிவிப்பு எதிர்பார்த்து பங்கு சந்தையில் காசு பார்க்க நிறைய முதலீட்டார்கள் இருக்கிறார்கள் ..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்த ஆண்டு மட்டும் என்ன பெருசா வாழுதாம், மக்கள் கையில பத்துப்பைசா கூட மிஞ்ச மாட்டேங்குது, கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களின் காட்டில் மழை

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவில் வளர்ச்சி இப்பவும் மிகவும் குறைவுதான் ,இனி மேலும் சரியும் இது நன்றாகத்தெரிந்த ஒன்றுதான் ,கட்டுச் சோத்தை மூடி மறைக்கிறார்கள் பொதுவாக வளர்ச்சியும் இல்லை ,வேகமும் இல்லை. ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  One country registered 7% this year and 6% over it next year. I.e 4.2%. Total 11.2. India registers 8% now and 5% next year which is 4% absolute. Total 12%. Which is bigger?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement