Load Image
dinamalar telegram
Advertisement

பணமழை: 2 நாட்களில் 40% உயர்ந்த பினோ பேமென்ட்ஸ் பேங்க் பங்குகள்!

Tamil News
ADVERTISEMENT
பேமென்ட்ஸ் வங்கிச் சேவைகள் வழங்கும் பினோ பேமென்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் பங்குச்சந்தைக்கு வந்தது. தொடர் சரிவில் இருந்த இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களில் மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

பேமென்ட்ஸ் வங்கிகள் ஆர்.பி.ஐ., விதியின் கீழ் செயல்படும் நிறுவனம். வங்கிச் சேவையை அணுக முடியாதவர்களும் சேமிப்புக் கணக்குகள் தொடங்க, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சிறு வணிகங்கள், பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கு எளிதில் பணம் அனுப்ப, பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேமென்ட்ஸ் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.

இதில் பினோ பேமென்ட்ஸ் வங்கியும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் பங்குச்சந்தையில் பட்டியலானது. பங்கு ஒன்றின் ஐபிஓ விலை ரூ.577 என நிர்ணயித்திருந்தனர். 2 மடங்கு சந்தாக்களைப் பெற்றது. பின்னர் வர்த்தகம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே சரிவைத் தொடங்கியது. இந்தாண்டு தொடக்கம் முதல் உலகளாவிய பொருளாதார பிரச்னைகளால், குறைந்த லாபம் ஈட்டும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்கள் கழண்டு கொண்டனர். இதனால் நவ., 18 வரை பினோ பேமென்ட்ஸ் பங்குகள் சுமார் 65 சதவீதம் வீழ்ந்திருந்தன.
Latest Tamil News இதற்கிடையே இந்நிறுவனத்தின் ப்ரீ ஐபிஓ எனும் பங்குச்சந்தைக்கு முந்தைய முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் கடந்த நவ., 10 அன்று முடிவடைந்தது. 55% பங்குகள் லாக் இன் முடிவடைந்த உடன் விற்பனைக்கு தயாராகின. அதன் பங்குதாரர்களான ஐசிஐசிஐ குழுமம், பிபிசிஎல் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவை 4.5 கோடி பங்குகள் வைத்திருந்தனர். அவர்கள் கணிசமாக பங்கு அளவை குறைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (நவ., 23) பிளாக் டீல் மூலமாக கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 1.59 சதவீத பங்குகள் அதாவது 13 லட்சம் பங்குகளை ரூ.228-க்கு வாங்கியது. இதனால் பங்கு விலை, நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டை அடைந்தன. இன்றும் இப்பங்குகளை அதிகம் வாங்கியுள்ளனர். இதனால் சுமார் 12% உயர்ந்தன. 2 நாட்களில் மட்டும் சுமார் 40% உயர்ந்துள்ளது. சரிவில் வாங்கியவர்களின் டீமேட் அக்கவுன்டில் பணமழை பொழிந்திருக்கும்.
Latest Tamil News பினோ பேமென்ட்ஸ் வங்கியின் சி.இ.ஓ., ரிஷி குப்தா சமீபத்தில் அளித்த பேட்டியில், சிறு நிதி வங்கி உரிமம் பெற ஆர்.பி.ஐ.,யை அணுகியுள்ளதாக தெரிவித்தார். 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.303 கோடியாக உள்ளது. 7.6 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் சென்ற காலாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. லாபம் ரூ.13.8 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டை காட்டிலும் 75% அதிகம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement