Load Image
dinamalar telegram
Advertisement

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இன்று(நவ., 24) அறிவித்துள்ளார்.

Latest Tamil News


நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம், வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை, ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.

இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் பதவி தான் உயர்ந்த பதவி. இருப்பினும், அனைத்து முடிவுகளையும் ராணுவத் தளபதியே எடுப்பார்; அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார்.

Latest Tamil News

இது தொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரையும், கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (13)

 • Fastrack - Redmond,இந்தியா

  பாஜ்வாவுக்கு ரெண்டு நாள் முன் ரிட்டையர் ஆக வேண்டியவருக்கு எதுக்கு தலைமை பதவி .. திராவிட மாடல் மாதிரி தளபதி தேர்ந்தெடுக்கறாங்க

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இந்த ஆளும் ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டா?

  • Anand - chennai,இந்தியா

   ஆம், அதுமட்டுமல்ல தலிபான், லஷ்கர், ஹிஜ்புல், ஜெய்ஷ், PFI, SDPI, SFJ, காலிஸ்தான், இத்தாலி காங்கிரஸ், திருட்டு திராவிஷம், உண்டியல்ஸ், குஜ்ரி, மமதை, முப்தி, அப்துல்லாஸ் போன்றோருடனும்.......

 • Anand - chennai,இந்தியா

  இந்த ஓநாய்களை பற்றிய நியூஸ் நமக்கு எதற்க்கு?

  • Indian - Vellore,இந்தியா

   உங்களைப்போலவே அங்கும் இப்படித்தான் சொல்வார்கள்

 • Sakthi - DIST KORBA CG,இந்தியா

  Pakistan PM has recommended new Army Chief but the appointment will be issued only after the approval of President of Pak.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  பார்த்தல் மிகவும் நல்லவர்போல் தோன்றுகிறது . நம் சகோதரர் நாட்டுக்கும் நமக்கும் ஒரு நல்ல பாலமாக இருந்தால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்

  • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

   திருமா கூட தான் பார்த்தால் நல்லவர் போல் தெரிகிறார் ஆனால் வாய திறந்தாலே கடவுள் எதிர்ப்பு சனாதன வெறுப்பு பிராமணரை கொள்ளும் அளவு ஆவேச பேச்சு என கொதிக்கிறாரே உள்நாட்டு மூஞ்சியே நம்ப ஏதுவாக இல்லை வெளி நாட்டு தளபதி பற்றி தாங்கள் உயர்வாக எண்ணுவது ? பாப்போம் இரு நாடுகளும் இணைந்தால் நல்லது நடக்கும்

  • Anand - chennai,இந்தியா

   ஹிட்லர், முசோலினி கூட இவனை விட நல்லவர்கள் போல தோன்றினார்கள்.....அவ்வளவு ஏன் ஜின்னாஹ், பூட்டோ, அயூப்கன், ஜியாஉல்ஹக், ஷெரிப், பெனஜிர், முஷாரப், இம்ரான் கான், பஜ்வா போன்றோரும் நல்லவர்களாகவே தோன்றினார்கள், இவர்களில் எவர் ஒருவராவது ஒரே ஒருவராவது இந்தியாவின் மீது நட்புணர்வு கொண்டார்களா? நல்லுணர்வு வைத்திருந்தார்களா?

  • சீனி - Bangalore,இந்தியா

   மேக்கப் போட்டா எல்லாம் நல்லவங்க மாதிரி தான் இருப்பாங்க, சீன அதிபரும் இப்படி தான் பொது வெளியில சீன் போடுவாரு. டோப்பாவ பார்த்து ஏமாந்து போற கூட்டம் தான் நாமும்.... அரசியல்ல ஆளை பார்த்து எடைபோடுவது தவறு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement