சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது நிறுத்தி வைக்க்பட்டு உள்ளது.
அதில் வருகிற 24ம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ரூபி மனோகரனை தற்காலிகமாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. அடுத்து நடைபெற உள்ள கூட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
அவர் அளிக்கும் விளக்கத்தை காங்கிரஸ் குழு பரிசீலனை செய்யும். 63 மாவட்ட காங் தலைவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நீதிக்கு எதிரானது: தினேஷ் குண்டுராவ்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரசின் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (21)
அடடே. காங்கிரஸ் இல்லாத இந்தியா விரைவில் நிறைவேரிடும் போல தெரியுதே........
அம்பது வருசமா தநாகாக பாடுபட்டு வாங்கின விருது கோமாளிக்கட்சி என்கிற விருது.
இவனுக்கு மேலிடத்து ஆதரவு இருக்கிறது என்ற ஆணவத்தினால் தான் இந்த கலவரம் ரவுடித்தனம் அடியாள் தலைவன்
இந்த லட்சணத்தில் அடுத்த கட்சியை பற்றி பேசுகிறார்கள். கோஷ்டி சண்டை என்பது காங்கிரஸூக்கு புதிது இல்லை.
ஆள் ஆளுக்கு தண்டல் பண்ணறான் காங்கிரஸ் கட்சியில் இன்னும் எவ்வளவு நாளுக்கு